ஏ. கே. எஸ். விஜயன்

ஆ. கு. சு. விஜயன் (ஆங்கிலம்: A.K.S. Vijayan) (பிறப்பு 15 டிசம்பர், 1961) இந்தியாவின் நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். நாகப்பட்டிணம் மாவட்ட தி.மு.க செயலாளராக பணியாற்றியுள்ளார்.

 

தற்போது திமுகவின் விவசாய அணி செயலாளராக உள்ள இவர், 14.06.2021 அன்று, தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இப்பதவியில் ஓராண்டு காலத்திற்கு நீடிப்பார். இவரது தந்தை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினைச் சார்ந்த ஆ. கு. சுப்பையா ஆவார். இவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

 

ஆ. கு. சு. விஜயன்

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகுதி :  நாகப்பட்டிணம்

தனிப்பட்ட விவரங்கள் :

பிறப்பு :     திசம்பர் 15, 1961 (அகவை 63)

சித்தமல்லி, தமிழ்நாடு

அரசியல் கட்சி : தி.மு.க

துணைவர்         : ஜோதி

வாழிடம் : சித்தமல்லி

Scroll to Top