ஸ்ரீதேவி

 

ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 – 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில் பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.

 

கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.

 

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.

 

கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

 

குடும்பம்

இவர் இயற்பெயர் ஸ்ரீலட்சுமிதேவி என்ற தனது பெயரை திரையுலகிற்காக சுருக்கமாக ஸ்ரீதேவி என்று மாற்றி வைத்து கொண்டார்.

இவரது பெற்றோர்கள் ஐய்யப்பன் நாயுடு – இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தார்.

இவரது தங்கை லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி, 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

 

இவர் தந்தை ஐய்யப்பன் நாயுடு அவர்கள் அப்போது தமிழகத்தில் புகழ்பெற்ற முன்னணி வழக்கறிஞராகவும், விருதுநகர் மற்றும் சிவகாசி வட்டாரத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சார்ந்தவராவார்.

 

அதன் பிறகு ஐய்யப்பன் நாயுடு அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆன போதிலும் தனது வழக்கறிஞர் பணி காரணமாக சென்னையில் வசித்த போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராஜேஸ்வரி ரெட்டி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர் அவர்களின் அன்பின் அடையாளமாக ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீலதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர்.

மேலும் 2 சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

 

நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

ஆண்டு     திரைப்படம்       ஏற்ற வேடம்       குறிப்புகள்

1969  துணைவன்        முருகன்   

1969  நம் நாடு   கிங் 

1970  அகத்தியர்                  

1970  பெண் தெய்வம்                  

1971  பாபு          

1971  யானை வளர்த்த வானம்பாடி மகன்          

1972  கனிமுத்து பாப்பா             

1972  மலைநாட்டு மங்கை         

1972  வசந்த அறைகள்                

1973  நண்பன்            

1973  தெய்வ குழந்தைகள்         

1973  பிரார்த்தனை            

1973  பாரத விலாஸ்            

1974  திருமாங்கல்யம்                  

1974  திருடி                 

1974  எங்கள் குல தெய்வம்         இளம் வள்ளி     

1974  அவளுக்கு நிகர் அவளே    இளம்‌ மீனா      

1976  தசாவதாரம்      இளவரசி சீதா  

1976  மூன்று முடிச்சு  செல்வி     

1977  உன்னை சுற்றும் உலகம்   சீதா

1977  காயத்ரி    காயத்ரி   

1977  கவிக்குயில்       ராதா        

1977  16 வயதினிலே   மயில்       

1977  சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு       கவுரி        

1978  இளைய ராணி ராஜலட்சுமி                

1978  யமுனா கங்கா காவேரி             

1978  டாக்ஸி டிரைவர்                 

1978  வணக்கத்திற்குரிய காதலியே           

1978  இது எப்படி இருக்கு            

1978  மச்சானைப் பார்த்தீங்களா                 

1978  மனிதரில் இத்தனை நிறங்களா                  

1978  முடிசூடா மன்னன்     தோற்றம் 

1978  பைலட் பிரேம்நாத்             

1978  சிகப்பு ரோஜாக்கள்   சாரதா     

1978  ஆண்கள்   பிரியா      

1978  கண்ணன் ஒரு கைக்குழந்தை            

1978  ராஜாவுக்கேத்த ராணி                

1978  சக்கபோடு போடு ராஜா            

1979  அரும்புகள்                 

1979  தர்ம யுத்தம்      சித்ரா       

1979  கல்யாணராமன்        கல்யாணராமன்        செண்பகம்       

1979  பகலில் ஒரு இரவு       சிந்து        

1979  கவரிமான்                  

1979  நீலமலர்கள்       மீனா        

1979  நான் ஒரு கை பார்க்கிறேன்’ ‘             

1979  பட்டாக்கத்தி பைரவன்      தீபா

1979  சிகப்புக்கல் மூக்குத்தி                

1979  லட்சுமி      லட்சுமி     

1979  தாயில்லாமல் நானில்லை          புவனா     

1980  குரு           

1980  ஜானி         அர்ச்சனா

1980  வறுமையின் நிறம் சிவப்பு         தேவி         

1980  விஸ்வரூபம்               

1981  பால நாகம்மா  பாலா       

1981  தெய்வ திருமணங்கள்                

1981  சங்கர்லால்        ஹேமா     

1981  மீண்டும் கோகிலா    கோகிலா 

1981  ராணுவ வீரன்            

1982  மூன்றாம் பிறை         பாக்கியலட்சுமி/ விஜயா / விஜி

1982  தேவியின் திருவிளையாடல்                

1982  தனிக்காட்டு ராஜா   வாணி      

1982  போக்கிரி ராஜா         வனஜா     

1982  வாழ்வே மாயம்          தேவி         

1982  வஞ்சம்              

1983  அடுத்த வாரிசு  வள்ளி / ராதா   

1983  சந்திப்பு    கீதா

1985  மீனாட்சியின் திருவிளையாடல்                  

1986  நான் அடிமை இல்லை       பிரியா      

1986  ஹரே ராதா ஹரே கிருஷ்ணா   ராதா        

2012  இங்கிலீஷ் விங்கிலிஷ்       சசி  

2015  புலி   ராணி யுவராணி       

 

பாலிவுட்

ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.

 

மறைவு

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது. பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது. உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

 

ஸ்ரீதேவி

 

பிறப்பு       ஸ்ரீலட்சுமிதேவி

13 ஆகத்து 1963

மீனம்பட்டி, சிவகாசி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு       24 பெப்ரவரி 2018 (அகவை 54)

துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

இறப்பிற்கான

காரணம்   தவறுதலாக நீரில் மூழ்குதல்

பணி          நடிகர், தயாரிப்பாளர்

செயற்பாட்டுக்

காலம்       1967-2018

பெற்றோர்(கள்) தந்தை : ஐய்யப்பன் நாயுடு

தாயார் : ராஜேஸ்வரி

வாழ்க்கைத்துணை  போனி கபூர், (1996-2018)

பிள்ளைகள்        ஜான்வி, குஷி

Scroll to Top