
திண்டுக்கல் ஐ. லியோனி (ஆங்கிலம்: Dindigul I. Leoni) என்பவர் ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவர். இவர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராகவும் உள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கிறித்துவ மதத்தை பின்பற்றுபவர். இவர் கங்கா கௌரி என்ற திரைப்படமொன்றில் நடித்துள்ளார். இவருக்கு 2010-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது.
ஆசிரியப் பணி
இவர் திண்டுக்கல் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். 2011-ம் ஆண்டு திமுகவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார். 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
+++++++++
திண்டுக்கல் ஐ. லியோனி
Dindigul I. Leoni
திண்டுக்கல் ஐ. லியோனி
தாய்மொழியில் பெயர் திண்டுக்கல் ஐ. லியோனி
பிறப்பு 22 நவம்பர் 1954 (அகவை 70)
திண்டுக்கல், தமிழ் நாடு, இந்தியா
பணி ஆசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி
செயற்பாட்டுக் காலம் 1997, 2020
தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சி
பட்டம் கலைமாமணி
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத் துணை : பாண்டியம்மாள்.
மற்றும் அமுதா
பிள்ளைகள் : அகலியா, சிவக்குமார், சதீசு குமார்
உறவினர்கள் : சி. எஸ். அமுதன் – (மருமகன்)