
கா. பூ. முனுசாமி
காவேரிப்பட்டினம் பூங்காவனம் முனுசாமி என்னும் கே. பி. முனுசாமி (பிறப்பு: சூன் 7, 1952) ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி. இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் ஆவார். இவர் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார். 1980 இல் காவேரிப்பட்டணம் பேரூர் அ.தி.மு.க செயலாளராக இருந்த இவர், மாவட்ட செயலாளர் என பல பதவிகளை வகித்தவர். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1991, 2001 ஆண்டுகளில் காவேரிப்பட்டினம் தொகுதியில் இருந்தும், 2011 இல்கிருட்டிணகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அமைச்சரவையில் நகராட்சி நிருவாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றி வந்த நிலையில் 2014-இல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வேப்பனபள்ளி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானார். எனவே, தான் 03 ஏப்ரல் 2020 முதல் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து10 மே 2021 அன்று விலகினார்.
கே. பி. முனுசாமி
- P. Munusamy
அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை
பதவியில் மே 16, 2011 – மே, 2014
தொகுதி கிருஷ்ணகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு சூன் 7, 1952 (அகவை 73)
காவேரிப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி : அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர் : மங்கையர்க்கரசி
வாழிடம் காவேரிப்பட்டினம், கிருட்டிணகிரி மாவட்டம்