துரைமுருகன்

துரைமுருகன் (Durai Murugan, பிறப்பு: சூலை 1, 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழக அமைச்சரும், வழக்குரைஞரும் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் ஆவார். இவர் திமுகவின் மேடைப்பேச்சாளர், இலக்கியவாதியுமாவார். தமிழகத்தின், வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டத்துறை அமைச்சராகத் தமிழக அமைச்சரவையில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது நீர்வளத் துறை அமைச்சராக உள்ளார்.

 

தனிப்பட்ட வாழ்க்கை

இவர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், வேலூர் மாவட்டத்திலுள்ள, காங்குப்பம் என்னும் ஊரில் பிறந்தார். சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலைமானி சட்டம் மற்றும் சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் முதுகலைமானி கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

 

அரசியல் வாழ்க்கை

துரைமுருகன் முதன் முதலில் 1971இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 8 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் வேலூர் மாவட்டத்திலுள்ள, காட்பாடி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்தார். இவர் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக நீர் வளத்துறை (சிறுபாசனம் உள்ளிட்ட பாசன திட்டம், மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, தேர்தல்கள் மற்றும் கடவுச்சீட்டுகள், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள்) அமைச்சராக பதவியேற்றார்.

 

போட்டியிட்ட தேர்தல்கள் மற்றும் முடிவுகள்

 

 

தேர்தல்     தொகுதி    கட்சி          முடிவு        வாக்கு சதவீதம்         எதிர்த்து போட்டியிட்டவர்         எதிர்த்து போட்டியிட்ட கட்சி      எதிர்த்து போட்டியிட்டவரின்வாக்கு சதவீதம்

1971    காட்பாடி   திமுக        வெற்றி      57.79  தண்டாயுதபாணி      நிறுவன காங்கிரசு 32.25

1977   ராணிப்பேட்டை         திமுக        வெற்றி      43.53  வஹாப் கே.ஏ.          சுயேச்சை 22.68

1980   ராணிப்பேட்டை         திமுக        வெற்றி      53.70  ரேணு. என்         அதிமுக          44.91

1984   காட்பாடி   திமுக        தோல்வி    39.62  ஜி.ரகுபதி  அதிமுக    57.08

1989   காட்பாடி   திமுக        வெற்றி      43.41  மார்கபந்து. ஆர்         அதிமுக          23.47

1991    காட்பாடி   திமுக        தோல்வி    33.02  கலைசெல்வி     அதிமுக    56.43

1996   காட்பாடி   திமுக        வெற்றி      61.20  பாண்டுரங்கண்         அதிமுக          27.93

2001   காட்பாடி   திமுக        வெற்றி      49.47  நடராஜன் பாமக        43.30

2006  காட்பாடி   திமுக        வெற்றி      49.55  ப.நாராயணன்  அதிமுக    47.59

2011    காட்பாடி   திமுக        வெற்றி      49.55  அப்பு          அதிமுக    47.59

2016   காட்பாடி   திமுக        வெற்றி      50.90  அப்பு          அதிமுக    37.44

2021   காட்பாடி   திமுக        வெற்றி      45.71  வி. ராமு    அதிமுக

 

 

துரைமுருகன்

நீர்வளத் துறை அமைச்சர்

தமிழ்நாடு அரசு பதவியில் உள்ளார்

 

தனிப்பட்ட விவரங்கள்

பிறப்பு       1 சூலை 1938 (அகவை 87)

குடியாத்தம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா தற்போது குடியாத்தம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)

அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

துணைவர்         து. சாந்தக்குமாரி

பிள்ளைகள்        கதிர் ஆனந்த்

வாழிடம்   சென்னை, தமிழ்நாடு, இந்தியா

காட்பாடி, வேலூர், தமிழ்நாடு, இந்தியா

கல்வி         இளங்கலைமானி சட்டம், முதுகலைமானி

சமயம்       இந்து

Scroll to Top