
ஜி. கே. மூப்பனார்
ஜி. கே. மூப்பனார் (G. K. Moopanar ஆகஸ்ட் 19, 1931 – ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் அறுவர் – சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி,இவருக்கு அந்த காலத்திலேயே 6000 ஏக்கர் நிலம் இருந்தது.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.
ஜி. கே. மூப்பனார் நினைவிடம்
இவரது மகன் ஜி.கே.வாசன்.சென்ற நடுவண் அரசின் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
வகித்த பதவிகள்
புரவலர்-தலைவர் கும்பகோணம் சாரணர் சங்கம்
தலைவர் சந்திரசேகராபுரம் கூட்டுறவு பண்டகசாலை 1956-1972
,, திருவையாறு ஸ்ரீ தியாகப் பிரம்ம மகோத்சவ சபை 1980-2001
,, தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 1965-1975
,, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1976-1980
பொதுச் செயலாளர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 1980-1988
தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி 1988-1989
தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் 1989-1990[1]
ராஜ்யசபா உறுப்பினர் 1977-1989
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத்தலைவர் 1996-2001
ஆயுள் உறுப்பினர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்
கோ. கருப்பையா மூப்பனார்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் பதவியில் 1989-1991
தொகுதி பாபநாசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு 19 ஆகத்து 1931 கபிஸ்தலம், தமிழ்நாடு
இறப்பு 30 ஆகத்து 2001 சென்னை
அரசியல் கட்சி தமிழ் மாநில காங்கிரஸ்
துணைவர் : கஸ்தூரி
பிள்ளைகள் 1 மகன் ஜி.கே.வாசன் , 1 மகள் உஷாராணி
வாழிடம் சென்னை