சு. திருநாவுக்கரசர்

 

சு. திருநாவுக்கரசர் (Su. Thirunavukkarasar, பிறப்பு: மே 07, 1949) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் புதுக்கோட்டை மாவட்டம், தீயத்தூர் கிராமத்தில் 1949 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.

 

1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர், தமிழக காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றி உள்ளார்.

 

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருச்சி தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

சு. திருநாவுக்கரசர்

 

2012 ஆம் ஆண்டில் திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்

தொகுதி :  திருச்சிராப்பள்ளி

 

தலைவர், தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி

பதவியில் 2016-2019

 

துணை சபாநாயகர், தமிழ்நாடு சட்டமன்றம்

பதவியில்

1977-1980

சட்டமன்ற உறுப்பினர் பதவியில் 1977-1999

தொகுதி : அறந்தாங்கி

 

தனிப்பட்ட விவரங்கள் :

பிறப்பு :     13 சூலை 1949 (அகவை 76)

தீயத்தூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா

அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு (Since 2009)

 

எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (பாஜக உடன் இணைக்கப்பட்டது)(1996-2002)

அண்ணா புரட்சித் தலைவர் தமிழர் முன்னேற்றக் கழகம்(1991-1996)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (1977-1991),1996

 

துணைவர்கள்   :ஜெயந்தி கற்பகம்

பிள்ளைகள் :     அன்பு, ராமச்சந்திரன், சத்யா, அம்ருதா, சாய் விஷ்ணு

பெற்றோர்          : மு. சுப்பராமன், சு. காளியம்மாள்

வாழிடம்   சென்னை

Scroll to Top