
மு. தம்பிதுரை
மு. தம்பிதுரை என்பவர் தமிழக அரசியல்வாதி ஆவார். 16-ஆவது நாடாளுமன்ற மக்களவையில் துணை சபாநாயகர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் போட்டியிட்ட இவரை அனைத்து கட்சிகளும் ஆதரித்தன. அதைத் தொடர்ந்து அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1985 முதல் 1989 வரை நாடாளுமன்ற துணைத்தலைவராகவும், பல்வேறு சமயங்களில் தமிழக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2009, 2014 தேர்தல்களில், அ.தி.மு.க கட்சியின் சார்பாக கரூரில் போட்டியிட்டு வென்றவர். அ.தி.மு.க.வில் கொள்கைப் பரப்புச் செயலராக இருந்தவர். அ.தி.மு.க வின் நாடாளுமன்றக்குழு தலைவராக உள்ளார்.
மு .தம்பிதுரை
மக்களவை துணை சபாநாயகர்
பதவியில் 13 ஆகத்து 2014 – 25 மே 2019
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மக்களவைகுழுத் தலைவர்
பதவியில் மே 2009 – மே 2019
கரூர் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினர்
பதவியில் மே 2009 – மே 2019
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு 15 மார்ச்சு 1947 (அகவை 78)
கிருட்டிணகிரி, இந்தியா
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர் : பானுமதி தம்பிதுரை
முன்னாள் மாணவர் சென்னை கிறித்துவக் கல்லூரி