வாணி ஜெயராம்

 

வாணி ஜெயராம் (Vani Jairam, இயற்பெயர்:கலைவாணி; 30 நவம்பர் 1945 – 4 பெப்ரவரி 2023)[3])பன்மொழி திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.[4][5] வாணி ஜெயராம் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவரின் இசைப்பயணம் 1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் ஆரம்பித்தது. அன்று முதல் நான்கு தலைமுறைகள் பின்னணி பாடினார். இந்தியத் திரைப்படப் பாடல்களோடு தனி ஆல்பம் மற்றும் பக்திப் பாடல்களையும் பாடினார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார்.

 

சொந்த வாழ்க்கை மற்றும் பின்னணி

வாணி ஜெயராம் தமிழ்நாட்டில் உள்ள வேலூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர் துரைசாமி ஐயங்கார்–பத்மாவதி ஆவர்.

 

தொடக்கம்

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை ம. சு. விசுவநாதன் இசையில் பாடினார். அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில் போன்ற பாடல்களை தமிழ்த் திரையுலகில் பாடினார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வாணி ஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

 

பாடல்கள்

நித்தம் நித்தம் நெல்லு சோறு!

மல்லிகை என் மன்னன் மயங்கும்..

என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்..

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்!

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்!

வேறு இடம் தேடி போவாளோ?

தனிப்பாடல்கள் தவிர காதல் பாடல்களை முன்னணிப் பாடகர்களோடு பாடியிருக்கிறார். “ஒரே நாள் உன்னை நான் நிலாவில்”, “பாரதி கண்ணம்மா”, “பூந்தென்றலே…”, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்”.[6].

 

குடும்ப வாழ்க்கை

வாணி இசையை ஆதரிக்கும் குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டார். இவரது மாமியார் பத்மா சுவாமிநாதன் சமூக ஆர்வலரும் கர்நாடக இசைப் பாடகியுமாவார். பத்மா எஃப். ஜி.நடேச ஐயரின் இளைய மகள் ஆவார். என். இராஜம் வாணியின் மைத்துனர்.[7][8][9][10]

 

இறப்பு

வாணி 2023 பெப்ரவரி 4 அன்று தனது 77வது வயதில் தன்னுடைய வீட்டில் கீழே விழுந்து இறந்தார்.[11]

 

தேசிய விருதுகள்

1975–தேசிய விருது – சில பாடல்கள் (அபூர்வ ராகங்கள்)

1980–சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது – சில பாடல்கள் (சங்கராபரணம்)

1991–சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது – “அனத்திநீயர ஹர” (சுவாதி கிரணம்)

2023-பத்ம பூசண் விருது, இந்திய அரசு[12][13]

மாநில விருதுகள்

1972 – சிறந்த பின்னணிப் பாடகிக்கான குசராத்து மாநில திரைப்பட விருது – கூங்காட்

1979 – சிறந்த பின்னணிக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது–அழகே உன்னை ஆராதிக்கிறேன்

1979 – சிறந்த பின்னணிப் பாடகிக்கான நந்தி விருது – சங்கராபரணம்

1982 – சிறந்த பாடகருக்கான ஒடிசா மாநில திரைப்பட விருது – தேப்ஜானி

பிற விருதுகள்

1972 – மும்பையின் சுர் சிங்கர் சம்சாத் வழங்கிய “போல் ரே பாபி ஹரா” திரைப்படத்தில் ‘பழமையான பாடலின்’ சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகர் மியான் தான்சென் விருது.

1979 – பண்டிட் ரவிசங்கர் இசையமைத்த மீரா திரைப்படத்தில் இவரது பாடல்கள் “மேரே டூ கிரிதர் கோபால்” பிலிம் வேர்ல்ட் (1979) சினி ஹெரால்டு (1979) விருதுகளைப் பெற்றுத் தந்தது.

1991 – தமிழ்த் திரைப்பட இசைக்கான இவரது பங்களிப்பிற்காக தமிழ்நாடு மாநிலத்தின் கலைமாமணி விருது.

1992 – “சங்கீத் பீட் சம்மான்” விருது பெற்ற இளைய கலைஞர்

2004 – எம். கே. தியாகராஜர் பாகவதர் – தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது[14]

2005 – நான்கு தென்னிந்திய மொழிகளிலும் திரைப்பட இசைக்கான இவரது சிறந்த பங்களிப்பிற்காக கமுகரா விருது.[15]

2006 – முத்ரா அகாதமி, சென்னையின் முத்ரா விருது.[16]

2012 – இசைக்கான இவரது பங்களிப்பிற்காக சுப்ரமணிய பாரதி விருது.[17]

2014 – ரேடியோ மிர்ச்சியின் வாழ்நாள் சாதனையாளர் விருது 16 ஆகஸ்ட் 2014 அன்று ஹைதராபாத்தில் வழங்கப்பட்டது

2014 – ஏசியாவிசன் விருது – “1983′ திரைப்படத்தின் ‘ஓலஞ்சலி குருவி’ பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகர் விருது

2014 – கண்ணதாசன் விருது, கண்ணதாசன் கழகம், கோவை[18]

2015 – வாழ்நாள் சாதனையாளர் விருது ரெயின்ட்ராப்ஸ் ஆன் மகளிர் சாதனையாளர் விருது வழங்கும் விழா சென்னை.

2016 – யேசுதாசுடன் சிறந்த இணைப் பாடலுக்கான ரெட் எஃப்எம் மியூசிக் விருதுகள் 2016

2017 – வனிதா திரைப்பட விருதுகள் – சிறந்த பாடகி

2017 – கண்டசாலா தேசிய விருது[19]

2017 – வட அமெரிக்க திரைப்பட விருதுகள் – நியூயார்க்- 22 சூலை 2017 – சிறந்த பெண் பின்னணிப் பாடகி – மலையாளம்

2018 – எம். எஸ். சங்கர நேத்ராலியா வழங்கிய சுப்புலட்சுமி விருது – சென்னை – 27 சனவரி 2018

2018 – பிரவாசி எக்ஸ்பிரஸ் விருதுகள் சிங்கப்பூர், வாழ்நாள் சாதனையாளர் விருது – 14 சூலை 2018.

Scroll to Top